Toast (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 12, சென்னை (Kitchen Tips): வீட்டில் வாங்கி வைத்திருக்கும் முட்டைகளை (Egg) எப்போதும் ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக முட்டையை வைத்து எப்படி சீஸி முட்டை டோஸ்ட் (Cheesy Egg Toast) செய்வது என்பதனை இந்த பதிவில் காண்போம். இதனை கண்டிப்பாக முட்டை என்றால் வேண்டாம் சொல்லும், குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

வேகவைத்த ஸ்வீட் சோளம் - 1/4 கப்

பச்சை குடைமிளகாய் - 1/4 கப்

சிவப்பு குடைமிளகாய் - 1/4 கப்

வெங்காயம் - 1

மிளகு தூள்

பிரட் - 4

சீஸ் துண்டு - 4

வெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு Tulasi Rasam Recipe: சளி, இருமலுக்கு அருமருந்தாக.. துளசி ரசம் செய்வது எப்படி..?

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் வேகவைத்த ஸ்வீட் சோளம், நறுக்கிய பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், சிறிதாக வெட்டிய வெங்காயம் சேர்க்கவும். பின்பு அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும். பின்னர் பிரட் துண்டுகளின் நான்கு முனைகளையும் விட்டு உள் பக்கமாக சதுரமாக வெட்டி தனியாக எடுத்து வைக்கவும்.

பின்பு கடாயில் வெண்ணெய் தடவி அதில் பிரட்டின் வெளிப்புறம் சதுரமாக வெட்டிய முனைகளை வைத்து அதில் தயார் செய்த முட்டை கலவையை ஊற்றவும். பிறகு அதன் மேல் சீஸ் துண்டை வைக்கவும். பின்பு உள்புறமாக வெட்டிய பிரட் துண்டை அதன் மேல் வைத்து சுற்றிலும் வெண்ணெய் தடவவும். இவற்றை திருப்பி விட்டு வேகவிடவும். அவ்வளவு தான் சீஸி முட்டை டோஸ்ட் தயார்.