
பிப்ரவரி 26, சென்னை (Kitchen Tips): வட இந்தியாவில் கச்சோரி மிகவும் பிரபலமான ஒரு ஸ்நாக்ஸ். அத்தகைய கசோரியில் நிறைய உள்ளன. கசோரி மாலை வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு சிறந்த ஸ்நாக்ஸ். இப்போது அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
1.பச்சைபட்டாணி - 1டம்ளர்
2.பச்சை மிளகாய்- 6
3.இஞ்சி - ஒரு சிறிய துண்டம்/விழுது
உப்பு - தேவையான அளவு
4.கோதுமை மாவு- 2 டம்ளர் Women Gym Wear: கவனிக்க வேண்டிய ஜிம் ஆடைகள்.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
செய்முறை:
முதலில் கோதுமை மாவை பிசைந்து வைத்துவிட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் பட்டாணி, பச்சை மிளகாய், இஞ்சி இவற்றை (ஒன்று, இரண்டாக) அரைக்கவும். பிறகு கோதுமை மாவை கொஞ்சம் பெரிய உருண்டைகளாக எடுத்து, தொன்னை செய்து, அதில் பட்டாணி விழுது எடுத்து அந்த தொன்னையில் வைத்து மூடி எண்ணையில் பொறித்து எடுத்தால் "பட்டாணி கசோரி" ரெடி. இதை காபி, டீ எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.