Ginger (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 27, சென்னை (Kitchen Tips): பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் வைத்து சாப்பிடுவர். அதுவும் சட்னியில் பொட்டுக்கடலை, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, காரச் சட்னி என பல விதமாக செய்து சாப்பிடுவோம். அந்தவகையில், இஞ்சி (Chutney) வைத்து ருசியான சட்னி எப்படி தயார் செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி - 4

தேங்காய் - 1 மூடி

பச்சைமிளகாய் - 4

புளி - சிறிய எலுமிச்சை அளவு

வெல்லம் - ஒரு நெல்லிக்காய் அளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

மஞ்சள்பொடி - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு Peas Kachori Recipe: சுவையான பட்டாணி கசோரி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

செய்முறை:

தேங்காயை துருவிக் கொள்ளவும். இஞ்சியை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். புளி விதைகளை நீக்கி புளியை தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்து வைக்கவும். மிக்ஸியில் துருவிய தேங்காய், இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு, மஞ்சள்பொடி, வெல்லம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதினையும் சேர்த்து, திட்டமாக தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். சிறிது கொதித்தவுடனே இறக்கி பரிமாறவும்.