ஆகஸ்ட் 15, சென்னை (Kitchen Tips): காலையில் டிபனாகவும், மாலையில் ஸ்நாக் ஆகவும் சாப்பிடக்கூடிய இந்தோ - சீனா சில்லி பிரட் (Chilli Bread) எப்படி சமைப்பது என பார்க்கப் போகிறோம். இதை நீங்கள் பத்து நிமிடங்களில் எளிதாகத் தயாரித்துவிடலாம். சூடாக சாப்பிட்டால் மிகுந்த ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - 5
எண்ணெய் - 3 தேக்கரண்டி
சில்லி பிரட் செய்ய
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
இஞ்சி - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
வெங்காயம் - 1 நறுக்கியது
குடைமிளகாய் - நறுக்கியது
உப்பு - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
வினிகர் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
மிளகாய் விழுது - 1 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் - 2 மேசைக்கரண்டி
சோளமாவு - 1 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - 1/4 கப்
வெங்காயம் - 1
கொத்தமல்லி இலை நறுக்கியது Kerala Kadala Curry Recipe: கேரளா ஸ்டைல் கடலைக்கறி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
செய்முறை:
பிரட்டின் ஓரங்களை வெட்டி சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பிரட்டை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும். சில்லி பேஸ்ட் செய்ய மிளகாயை தண்ணீரில் வேகவைத்து, ஆறவிட்டு நன்கு விழுதாக அரைக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.
அடுப்பை குறைந்த தீயில் வைத்து வினிகர், சோயா சாஸ், அரைத்த மிளகாய் விழுது, தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். சோளமாவு, தண்ணீர் இரண்டையும் சேர்த்து கட்டியின்றி கரைத்து கடாயில் சேர்க்கவும். அடுத்து டோஸ்ட் செய்த பிரட்டை சேர்த்து நன்கு கலந்து விடவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு உடனே பரிமாறவும். அவ்வளவுதான் காரமான சில்லி பிரட் தயார்!