Mor Kulambu Idly (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 08, சென்னை (): உங்கள் வீட்டில் புளித்த தயிர் அதிகமாக இருந்தால், மோர் குழம்பு இட்லி செய்யுங்கள். இது சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 2 கப்

தயிர் - 1 கப்

தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

மிளகு - 1/2 ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 5

பூண்டு - 6 பல்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வரக்கொத்தமல்லி - 1/2 ஸ்பூன்

வரமிளகாய் - 2 International Cat Day 2024: "எகிப்தில் கடவுள்.. உண்மையில் ராஜா.." சர்வதேச பூனைகள் தினம்..!

செய்முறை:

கள்ளப் பருப்பு, தேங்காய்த்துருவல், இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் இவைகளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள தயிரினை நன்றாக மோரின் பதத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மோர் சேர்க்க வேண்டும். பிறகு அதில் அரைத்து வைத்ததை சேர்க்கவேண்டும். அது பொங்கி வரும் வரை வைத்திருக்க வேண்டும்.

கொதிக்க விடாமல் நன்கு பொங்கிய உடன் அதனை எடுத்து தனியே வைக்க வேண்டும். பிறகு அதே பாத்திரத்தில் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்தவற்றை எடுத்து மோர்க் குழம்பில் ஊற்ற வேண்டும். இப்போது வழக்கம்போல் இட்லி செய்து அதற்கு மேலாக அதிகமாக மோர் குழம்பு ஊற்ற வேண்டும். இப்போது சூடான சுவையான மோர் குழம்பு இட்லி தயார்.