Agriculture (Photo Credit: Pixabay)

ஜூன் 21, புதுடெல்லி (New Delhi): கரூரை சேர்ந்த பி.இ பட்டதாரி இளைஞர் கார்த்திக் ஆன்லைன் வர்த்தகத்தைப் பயன்படுத்தி முருங்கை முதல் புற்று மண் வரை பல பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார்.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக், 2015ம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பாண்டிச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தார். பின் குறைவான சம்பளம் மிகுந்த பணிச் சுமை காரணமாக அந்த வேலையை விட்டுவிட்டு பள்ளப்பட்டியில் இயற்கை உணவு அங்காடியும் பின் நாட்டுமாட்டு பாலும் விற்பனை செய்து வந்தார்.

பின் அவரின், நம்மாழ்வார் ஐயாவின் கருத்துக்களில் ஈர்க்கபட்ட பெரியம்மா சரோஜா, கரூர் முருங்கை மற்றும் காய்கறி உற்பத்தியாளர் நிறுவனத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார். அவரின் உதவியால், கார்த்திக் அந்த நிறுவனத்தில் தலைமை செயலர் அலுவலர் பொறுப்பில் பணியாற்றினார். அதில் கிடைத்த அனுபவமும், நண்பர்களும், தனது பெரியம்மாவின் சில யோசனைகளும் இந்த இயற்கை விவசாய விளைபொருள்களை மதிப்புக் கூட்டி ஆன்லைனில் விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்டார்.

பிறகு சொந்த ஊரிலேயே அதிகம் விளையும் முருங்கையிலிருந்து மதிப்பு கூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்து ஆன்லைனில் வியாபாரம் செய்யத் தொடங்கினார். இதற்காக சமூகவலைதளங்களில் விளம்பரம் செய்துள்ளார். ஆரம்பத்தில் வாடிக்கையாளர்கள் இல்லை. பின் தாமாகவே மக்கட்களுக்கு கூட்டு பொருட்களின் நன்மை குறித்து விளம்பரப்படுத்தியுள்ளார். முருங்கையில் ஆரம்பித்து தற்போது பிரண்டை, கருவேப்பில்லை, அத்தி என பல விளைபொருட்களிலிருந்து கூட்டு பொருள்களை விற்பனை செய்து வருகிறார்.

முருங்கை: இவர் நேரடியாக விவசாயிகளிடமிருந்து முருங்கைப் பொருட்களை மொத்தமாக வாங்கி கூட்டுப்பொருட்களை உற்பத்தி செய்கிறார். முருங்கையில் தொக்கு, பிசின், சூப் மிக்ஸ், முருங்கைக் கீரைசாதப் பொடி, ஊறுகாய், தேன் முருங்கைப்பூ என முருங்கையிலிருந்து மட்டும் 25-க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டுப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்கிறார். அதிலும் சத்துக்கள் நிறைந்த, தேனில் ஊறவைத்து தரும் முருங்கை பிசினிற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ஊறவைக்காத பிசின் கிலோ ரூபாய் 600 க்கும் விற்பனை செய்யப்படுகிறார். Sex Videos Recommended to Minors on Instagram: சிறார்ககளை கெடுக்கிறதா இன்ஸ்டாகிராம் அல்காரிதம்.. ரெகமெண்டில் வரும் ஆபாச படங்கள்..!

பிரண்டை & முடக்கத்தான்: இதில் பெரிய அளவில் முதலீடு போடுவதில்லை. உழைப்பும், நேரமுமே தேவை என்கிறார் கார்திக். தனது தோட்டதிலேயே விளையும் பிரண்டை, முடக்கத்தான் போன்ற கீரைகளிலிருந்து தொக்கு, ஊறுகாய், பிரண்டைபொடி, சாதப்பொடி என கூட்டுப்பொருட்களை சந்தைபடுத்துக்கிறார்.

பூக்களின் டீத்தூள்: ஆவாரம்பூ, தும்பைபூ, கறிவேப்பில்லை, புதினா, துத்தி, துளசி, கீழாநெல்லி, செம்பருத்திப் பூ என பல வகையான பூ மற்றும் இலைகளிலிருந்து 50 க்கும் மேற்பட்ட மூலிகைத் தேநீர் தூளும் தயாரித்து விற்பனை செய்கிறார்.

தனது தோட்டத்திலேயே பனகொட்டை விதைத்து கிழங்கு எடுத்து அதை வேகவைத்துக் காயப்போட்டு, அரைத்து மாவாக மாற்றி விற்பனை செய்கிறார். இதை சூடுதண்ணீரில் போட்டு கூழாகக் குடிக்கலாம் என்கிறார் கார்த்திக்.

புற்றுமண்: தனது வாடிக்கையாளர்களில் ஒருவரான சென்னையை சேர்ந்த மருத்துவர் ஒருவர், கறையான் புற்றுமண் கேட்டதையடுத்து, புற்றுமண்ணின் நன்மைகளை அறிந்துகொண்டு தனது ஊரில் தாராளமாக கிடைக்கும் புற்றுமண்ணை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார். அதற்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்கிறார். புற்றுமண் சரும பாதுகாப்புக்கும் (ஃபேசியல் மற்றும் மண் குளியல்), எலும்பு முறிவுக்கு கட்டு போடுவதற்கும் பயன்படுகிறது. இம்மண்ணை கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.

நம் நாட்டில் 15 முதல் 25 வயதுக்குற்பட்டவர்களில் 57% பெண்களுக்கும் 25% ஆண்களுக்கும் இரத்தசோகை உள்ளது. இரத்தசோகைக்கு அருமருந்தான முருங்கைக்கு நம் நாட்டிலேயே இவ்வளவு தேவை இருக்கிறது. இதன் பயன்களை விளக்கி விளம்பரப்படுத்துகிறேன். தனது வேலையை விட்டு வந்த சமயத்தில் தம்மை விமர்சித்து வந்தவர்கள் தற்போது பாராட்டுகிறார்கள், தனக்கு பிடித்தாமான தொழிலை முழு முயற்சியுடன் செய்தால் எந்த தொழிலும் வெற்றிகாணலாம் என்கிறார் கார்த்திக்.