நவம்பர் 08, சென்னை (Kitchen Tips): காய்ச்சல், சளி மற்றும் தீவிர கட்டுப்பாட்டுடன் கூடிய டயட்டை பின்பற்றுபவர்களுக்கு நாக்கில் ருசியே தெரியவில்லை என்று சொல்வார்கள். அதுபோன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைத்தும் நாக்குக்கு ருசியாகவும் இருந்தால் இந்த உணவை எப்படி வேண்டாமென்று சொல்ல முடியும். அப்படிப்பட்ட உணவுதான் இந்த வெஜ் ஓட்ஸ் சூப் (Veg Oats Soup). வாங்க எப்படி செய்யறதுனு பார்த்திடலாம்.
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் அரைத்தது -2 தேக்கரண்டி
முட்டைக்கோஸ்-கால் பகுதி
கேரட் 1
பீன்ஸ்-10
உருளைக்கிழங்கு – 1
தக்காளி – 1/2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி – அலகரிக்க
மிளகாய் தூள் -1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் -1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி Lecoanet Hemant: ஃபேஷன் துறையில் ஆர்வமா..? அப்போ மிஸ் பண்ணாதீங்க..!
செய்முறை;
காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய காய்கறிகள், மிளகாய்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள் உப்பு போட்டு மூன்று விசில் வேக வைக்கவும். விசில் அடங்கிய பிறகு ஓட்ஸ் தூள் போட்டு நன்றாக கலந்து விடவும் . மேலே கொத்தமல்லி இலை தூவி பரிமாரவும். மாலை நேரத்தில் பிரட் தோஸ்த்வுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.