மார்ச் 13, சென்னை (Health Tips): நம் வீட்டில் உள்ள சமயலறையில் இருக்கும் சீரகம், சோம்பு, வெந்தயம், பூண்டு, கிராம்பு, ஏலக்காய், மிளகு என இவை அனைத்தையும் கொண்டு நம் உடலில் உண்டாகும் பலவிதமான நோய்களை குணப்படுத்த முடியும். இவை அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது. Belly Loss Exercise: தொப்பையை குறைக்க வேண்டுமா? – இதை செய்தால் போதும்..!
இதில், நாம் அதிகம் உணவுப்பொருளில் சேர்க்க கூடிய ஒன்றான பூண்டில் அதிகளவிலான நோய்தீர்க்கும் மருத்துவ குணங்கள் இருக்கின்றது. இதை பச்சையாகவோ மற்றும் சமைத்து உண்பதை விட, இதனை தண்ணீரில் கலந்து பருகுவது அதிக பலனை தரும். இரண்டு பூண்டு (Garlic Water) பல்லுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து தினமும் காலையில் பருகி வருவதால், மாரடைப்பு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
பூண்டு தேநீரின் நற்பயன்கள்: தினமும் காலையில் பூண்டு டீ குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் பல நன்மைகளை பற்றி இதில் பார்க்கலாம்.
உடலில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி, உடலில் உள்ள நச்சு மற்றும் உடல் எடையை குறைக்கவும் பூண்டு டீ தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. சருமத்தை பாதுகாக்கவும் இது உதவுகிறது. வைரஸ் கிருமிகளை எதிர்த்து போராடி அந்த நோய்களை குணப்படுத்த உதவும் வைட்டமின் சி, வைட்டமின் பி1, பி6, ஆன்டி ஆக்ஸிடன்கள் ஆகிய ஊட்டச்சத்துகள் பூண்டு டீ-யில் உள்ளன. செரிமான கோளாறு ஆகிய பிரச்சனைகளையும் இது குணப்படுத்துகிறது. வயிற்று வலி, வாயுப் பிடிப்பு, மலச்சிக்கல் மற்றும் வீக்கம் ஆகியவற்றையும் முற்றிலுமாக குணப்படுத்தும். மேலும், பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதிக வயிற்று வலி ஏற்படும் போது, காலையில் பூண்டு டீ-யை குடிப்பதன் மூலம் ரத்த ஓட்டத்தை சீராக வைத்து, வலியை குறைக்க உதவுகிறது.