ஜூலை 08, சென்னை (Chennai News): நெக்லேரியா ஓர் ஒற்றை செல் உயிரினம். இந்த அமீபா ஏரிகள், ஆறுகளில் காணப்படும். அமீபாவில் (Amoeba) அனைத்தும் கொல்லும் தன்மையுடன் இருக்காது. ஆனால் நெக்லேரியா ஃபோலேரி மனிதர்களின் மூக்கு வழியாக நுழைந்து, மூளைக்குச் சென்று திசுக்களையும், நரம்புகளையும் தாக்கி சேதப்படுத்தி, மூளையில் தொற்றை ஏற்படுத்துகிறது. இறப்பை விளைவிக்கும் அளவிற்கு இது ஆபத்தானது. அதிகப்படியான முன்தலைவலியோடு, காய்ச்சல், வாந்தி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். நோய் தீவிரமடையும்பட்சத்தில், வலிப்பு, மாறுபட்ட மனநிலை, பிரமை, கோமாவை கூட ஏற்படுத்தலாம்.
கேரளாவில் பரவும் அமீபா: கடந்த சில மாதங்களாக கேரளாவில் அமீபா மூளைச்சாவு நோய் வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் கண்ணூரில் 13 வயது சிறுமியும், மலப்புரத்தில் 5 வயது சிறுமியும் ஏற்கனவே இந்த நோயால் உயிரிழந்த நிலையில், தற்போது கோழிக்கோட்டில் மேலும் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்திலும் அமீபா பரவும் என மக்கள் பீதியில் உள்ளனர். SC On Menstrual Leave: மாதவிடாய் கால விடுப்பு.. உச்ச நீதிமன்றம் சொன்ன பதில்..!
தமிழக அரசின் அறிவிப்பு: இந்நிலையில் இதுக்குறித்து சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "மனித மூளையை தாக்கும் அமீபா குறித்து பதட்டமடைய வேண்டாம். அமீபா பரவாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்துள்ளது. முக்கியமாக, நீச்சல் குளம் மூலம் இந்த அமீபா நுண்ணுயிரி பரவ வாய்ப்பு அதிகமாக இருப்பதால் அதற்கேற்ற சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.