Dental Hygiene (Photo Credit: Pixabay)

அக்டோபர் 25, சென்னை (Health Tips): குழந்தைகளுக்கு வாய் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பெற்றோர் எடுத்துரைக்க வேண்டும். அவற்றில் அலட்சிப்படுத்தினால் பல பிரச்சனைகள் வரக்கூடும். குழந்தைகளின் முத்துப்போன்ற பற்களை பராமரிக்கத் தேவையான ஆலோசனைகளை கொடுக்கிறார், சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர். இவர் விஜய் டிவியின் ஹலோ டாக்டர் நிகழ்ச்சிக்கு கொடுத்த வீடியோவினைப் பற்றி இப்பதிவில் காணலாம்.

அவர் கூறியதாவது, "பிறந்த நாளில் இருந்தே குழந்தையின் பல் பராமரிப்பில், பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சிறு வயதிலேயே ஐஸ்கிரீம், சாக்லேட், பிஸ்கட் சாப்பிட்டால் பல் பிரச்சனைகள் வரும் என பல பெற்றோர்களும் குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பதுண்டு. சிறு வயதில் இதுபோன்ற உணவுப் பொருட்களை மகிழ்ச்சியுடன் சாப்பிடுவதை தவிர்க்காமல், கட்டுப்பாடுடன் சாப்பிடச் சொல்லுங்கள். ஆனால், சாப்பிட்டதும் அவர்களாகவே வாய் கொப்பளித்துக் கொள்ள பழக்கப்படுத்துங்கள். Kambu Adhirasam Recipe: தீபாவளி ஸ்பெஷல்! கம்பு அதிரசம் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

உணவுகளின் லிஸ்ட்: நாம் எப்போதும் சாக்லேட் தான் சொத்தைப் பல்லுக்கு காரணம் என எண்ணுகிறோம். உண்மையில் முதல் எதிரி பாப்கார்ன் மற்றும் பிஸ்கட் தான். பால் புட்டியுடன் குழந்தையை உறங்க வைப்பது, பல்லில் ஒட்டும் தன்மைகொண்ட பிஸ்கெட், சாக்லேட், கேக் போன்ற திண்பண்டங்களை அடிக்கடி உண்பது, சர்க்கரை அதிகமுள்ள பால், குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதன் மூலம் குழந்தைகளின் பற்களில் சொத்தை ஏற்படுகிறது.

குழந்தைகளுக்குப் பால் புகட்டியவுடன் ஈறுகளை துணியால் துடைத்துவிட வேண்டும். முதல் பல் முளைத்தவுடன் பல் துலக்குவதை தொடங்க வேண்டும். 2 வயதுக்கும் மேல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் இரண்டுமுறை பற்களை பெற்றோர் சுத்தம் செய்துவிட வேண்டும். குழந்தைகள் தானே துப்ப தெரிந்துகொள்ளும்வரை பற்பசையைப் பயன்படுத்த வேண்டியதில்லை. வெறுமனே 'பிரஷ்' வைத்து பற்களை சுத்தம் செய்துவிட்டால் போதும்." என்கிறார்.

டாக்டரின் வீடியோ: