Lip (Photo Credit: Pixabay)

மே 03, சென்னை (Health Tips): உதடு என்பது அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒரு அங்கமாகும். இதை அழகாகவும் ஆரோக்கியமாகவும் கட்டாயம் பராமரித்துக்கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கும் கறுப்பான உதடும் ஒரு சிலருக்கு சிவப்பான உதடும் இருக்கும். அந்தவகையில் வீட்டு சமையலறையில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து எப்படி உதட்டை அழகாக மாற்றலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். Dark Lips Home Remedies: உதடு கருப்பா இருக்கா.? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

உதட்டை சிவப்பாக மாற்ற:

  • சிறிய தோல் சீவிய பீட்ரூட் துண்டையும் அரை தேக்கரண்டி வெந்தயமும் தண்ணீரில் இரவு முழுவது ஊறவைத்து அரைத்து வடித்து எடுத்து அதை காலை மாலை என உதட்டில் தடவி வர கருமை நீங்கி சிவப்பாகும்.
  • தினமும் சிறிய அளவில் பீட்ரூடை எடுத்து உதட்டில் அடிக்கடி தடவி மசாஜ் செய்துவந்தால் உதடு இயற்கை அழகு பெறும்.
  • எலுமிச்சை பழத்தை மெலிதாக நறுக்கி அதில் உப்பு போட்டு உதட்டில் தடவி வர அதன் ப்ளீச்சிங் தன்மை உதட்டில் உள்ள இறந்த செல்களை அகற்றி கருமையைப் போக்கும்.
  • விளக்கெண்ணையை உதட்டில் தடவி வந்தால் உதட்டின் வறட்சியை போக்குவதோடு மட்டுமில்லாமல் கருமையையும் நீக்குகிறது.
  • ஐஸ் கட்டிகள் இறந்த செல்களை நீக்கி உதட்டை மென்மையாக்குகிறது. இதை உதடு மட்டுமல்லாமல் முகத்திலும் பயன்படுத்தலாம் முகம் பொழிவு பெறும்.
  • காலை மாலை என இருவேளையும் தேனை எடுத்து உதட்டில் தடவ வெடிப்பு வறட்சி குறைந்து மென்மையாகி சிவப்பாகும்.