மே 03, சென்னை (Health Tips): கோடைகாலத்தில் உடல் சூட்டினால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட நேரிடும். இந்நிலையில், வெயில் காலத்தில் நுங்கு சீசன் ஆரம்பமானதை அடுத்து, எங்கு பார்த்தாலும் நுங்கு வியாபாரம் நடைபெறுகிறது. நுங்கை ஐஸ் ஆப்பிள் (Ice Apple) எனவும் அழைக்கிறார்கள். வெயில் சூட்டை தணித்து, உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் நுங்கு பற்றி இதில் பார்ப்போம். 3 People Died Extreme Heat: 104 டிகிரி செல்சியஸ் வெப்பம்; கடும் வெயில் காரணமாக ஒரே நாளில் 3 பேர் பலி..!
பெரும்பாலும் பெண்களுக்கு நுங்கு (Panai Nungu) நல்ல மருந்தாக பயன்படுகிறது. நுங்கில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. மேலும், இதில் குறைந்த அளவில் கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து உள்ளது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்கிறது. பனை நுங்கில் (Borassus Flabellifer) உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை உண்டாக்கி, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று கோளாறு பிரச்சனைகளை சரி செய்கிறது.
இது வெயில் காலத்தில் வரக்கூடிய அம்மை நோய்களை தடுத்து, உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறது. கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரித்து, மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் சரியாகின்றது. மேலும், இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு (Palmyra Palm) நல்ல பயனளிக்கிறது. இதில் உள்ள அந்த்யூசைன் எனும் இரசாயனம், பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டி வருவதை தடுக்கிறது. நுங்க சதையை உடலில் தேய்த்து வருவதால், கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும். நுங்கு சுளைகளை இளநீரில் ஊற வைத்து, அதனை சாப்பிட்டால் மிக ருசியாகவும், உடலுக்கு குளிர்சியாகவும் இருக்கும்.