மே 17, சென்னை (Health Tips): நாம் காலை எழுந்தவுடன் முதலில் அனைவரும் டீ, காபி, பால் ஆகியவற்றையே விரும்பி அருந்துகிறோம். அதில் ஒரு சிலர் கிரீன் டீ (Green Tea) பருகுகின்றனர். பெரும்பாலும், "கிரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும். மேலும், முகம் பொலிவாக இருக்கும்" என்பது தான் பொதுவாக அனைவருக்கும் தெரியும். இதை தவிர, தலை முதல் கால் வரை நிறைய பல நன்மைகள் நிறைந்துள்ளன. இதில், அளவுக்கு அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இந்த கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இதில் பார்ப்போம்.
முகப்பொலிவு: கிரீன் டீயில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து இருப்பதால், சருமத்தில் பழுதடைந்துள்ள செல்களை புதுப்பித்து, முதுமைத் தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும், முகம் பொலிவு பெற உதவுகிறது. Temple Priest Arrest: பூசாரியால் பலாத்காரம் செய்யப்பட்ட தொகுப்பாளினி; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!
எடை குறைப்பு: உடல் எடையைக் குறைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது. தினசரி இரண்டு கப் கிரீன் டீ பருகுவதால், 6 மாதங்களில் குறிப்பிட்ட அளவு உடல் எடை குறையும்.
புற்றுநோய் தடுப்பு: பெருங்குடல் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்க இது உதவுகிறது. மேலும், மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியையும் இது தடுக்கிறது.
பற்கள் வெண்மையாகுதல்: பச்சை தேயிலையானது பற்களை வெண்மையாக்குவதில் பெரிதும் பயனளிக்கிறது. மேலும், பற்களில் இருக்கக் கூடிய பிளேக் கட்டிகளை எதிர்த்துப் போராடுகின்றது.
கண் பார்வை: கிரீன் டீ தொடர்ந்து பருகி வருபவர்களுக்கு சிறந்த கண் பார்வை திறன் இருப்பதாக கூறப்படுகிறது.