Olive oil (Photo Credit: Pixabay)

மே 24, சென்னை (Health Tips): எண்ணெயில் பல வகைகள் உள்ளபோதிலும், இதய ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த எண்ணெய் என்றால் அது ஆலிவ் (Olive Oil) எண்ணெய்தான். இதனை சமையலில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இதில் பார்ப்போம். Auto Driver Arrested: ரயிலில் பயணிக்கும் பெண்களிடம் செயின் பறிப்பு; ஆட்டோ ஓட்டுநர் கைது..!

ஆலிவ் எண்ணெய்யின் பயன்கள்:

ரத்த அழுத்தத்தைக் குறைத்து, உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவையும் குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை குறைந்தால், இதய நோய் அபாயம் தடுக்கப்படும்.

ஆலிவ் எண்ணெயில், மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் இருக்கின்றது. இது உடலில் இன்சுலின் அளவை சீராக பராமரித்து, நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

இதில், ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

உடலில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள வைட்டமின் ஈ மிகவும் முக்கியமானது ஆகும். இதனால், உடல் பொலிவோடு அழகாக காணப்படும். மேலும், உடல் உறுப்புகளும் சீராக செயல்படும்.

ஆலிவ் எண்ணெய் செரிமானம் கோளாறுகளை சரிசெய்வதால், மலச்சிக்கல் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும், எலும்புகள் வலுவடையச் செய்கிறது.