Ridge Gourd (Photo Credit: @Vani_260 X)

ஜூன் 11, சென்னை (Health Tips): கோடைக் காலத்தில் அதிகமாக நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளைத்தான் பயன்படுத்தவேண்டும். அந்தவகையில், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றான பீர்க்கங்காய் (Peerkangai) பற்றி அதிலுள்ள நன்மைகளை இதில் பார்ப்போம்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்: பீர்க்கங்காய் கலோரிகள் குறைந்த ஒன்றாகும். இதில், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமுள்ளது. இது, நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக இருக்கிறது. இதன் ஹைப்போகிளைசெமின் திறன்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றது. Nokia 3210 4G: புத்தம்புது சிறப்பம்சங்களுடன் நோக்கியா 3210 4G போன் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!

வீக்கத்தை குறைக்க உதவுகிறது: பீர்க்கங்காயின் (Ridge Gourd) இலைகள் வீக்கத்தை குறைக்கிறது. பீர்க்க இலைகளை வீக்கம் உள்ள இடத்தில் அரைத்து தடவினால் நல்ல பலன்தரும். உள்ளுக்குள் இருக்கும் வீக்கத்தையும் குறைக்கும். மேலும், இருமலைப்போக்கி, சுவாச மண்டலத்தில் உள்ள வீக்கங்களை சரிசெய்கிறது.

கண்பார்வை தெளிவு: இதிலுள்ள வைட்டமின் ஏ, கண் பார்வையை அதிகரிக்க உதவுகின்றது. மேலும், முதுமையிலும் கண் பார்வைத்திறனை நன்றாக வைத்திருக்கச் செய்கிறது. கண்ணில் வேறு குறைபாடுகள், மங்கலான பார்வை ஆகிய அனைத்தையும் இது குணப்படுத்துகின்றது.

மலச்சிக்கலைப் போக்குகிறது: பீர்க்கங்காயில் நீர்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், இதில், செல்லுலோஸ் அதிகம் உள்ளது. அது இயற்கையான நார்ச்சத்துக்கள் ஆகும். இதனால், பீர்க்கங்காயை சாப்பிடும்போது மலச்சிக்கல் நீங்குகிறது. இது, செரிமானம் மற்றும் குடல் இயக்கத்தை முறைப்படுத்துகின்றது.

உடல் எடையை குறைப்பு: பீர்க்கங்காயில் உள்ள நார்ச்சத்துக்களால் உடல் இதை உறிஞ்சுவதற்கு தாமதம் ஆகின்றது. இதனால், நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இதில், கலோரிகளும் குறைவு. மேலும், உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த தேர்வாக இது அமைகிறது. பொதுவாகவே, நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் உடல் எடையை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.