டிசம்பர் 15, சென்னை (Chennai): பொதுவாக மணி பிளாண்டை (Money Plant), அனைவரும் வீடுகளில் மற்றும் அலுவலக மேஜையில் அழகுக்காக பாட்டில்களில் வைப்பது சகஜம். மேலும் இந்தச் செடியை அருகில் வைத்தால் பணம் கொட்டும் என்ற நம்பிக்கையும் உண்டு.
மணி பிளாண்ட் வளர்க்கும் முறை: இந்த செடியை வளர்ப்பதற்கு அதன் இலைகள் இருந்தாலே போதுமானது. வேர் வேண்டுமென்று அவசியம் இல்லை. எனவே முதலில் ஒரு இலையை சிறிது தண்டுடன் நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கப் அல்லது கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் ஊற்றி, அதற்குள் அந்த இலையை போட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். Yamaha R3, MT-03 Launched: இந்தியாவில் அறிமுகமாகியுள்ள யமஹாவின் 2 தயாரிப்புகள்... சிறப்பம்சங்கள் பற்றி தெரியுமா?..!
ஆனால் 7 நாட்களுக்கு ஒரு முறை பாட்டிலில் இருக்கும் தண்ணீரை மாற்றி விட வேண்டும். குறைந்தது ஒரு மாதத்திற்காவது இவ்வாறு தண்ணீரை மட்டும் மாற்றிக் கொண்டே இருங்கள். சரியாக 30 நாட்கள் கழித்து செடியில் வேர் வந்துவிடும். அவ்வளவுதான் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் உங்கள் செடி. அதனை நீங்கள் உங்கள் விருப்பப்பட்ட இடத்தில் வைத்து அலங்கரித்துக் கொள்ளுங்கள்.