Chettinad Tomato Kuzhambu (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 22, சென்னை (Kitchen Tips): நம் உணவில் தினம்தோறும் சேர்த்துக் கொள்ள கூடிய காய்கறி தக்காளி ஆகும். அந்த தக்காளியை வைத்து சுவையான குழம்பு செய்து சாப்பிட்டிருப்போம். அந்தவகையில், செட்டிநாடு ஸ்டைலில் தக்காளி குழம்பு (Chettinad Tomato Kuzhambu) எப்படி செய்வது என்பதனை இதில் பார்ப்போம். இந்த குழம்பு மிகவும் சுவையாகவும், செய்வதற்கு மிக எளிமையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

தக்காளி - 4 (நறுக்கியது)

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க தேவையானவை:

சின்ன வெங்காயம் - அரை கப்

தேங்காய் - முக்கால் கப்

பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி

வரமிளகாய் - 3

சீரகம் - 1 தேக்கரண்டி

மல்லி - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி. Vegetable Soup Recipe: ஒரு முறை காய்கறி சூப் இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!

தாளிக்க தேவையானவை:

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

கடுகு - 1 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொட்டுக்கடலை, மல்லி, சீரகம், வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

பின்னர், அதில் தேங்காய் சேர்த்து கிளறிவிட்டு, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்துகொள்ள வேண்டும்.

பின்பு, மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், தக்காளியை சேர்த்து, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, 10 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ளவும்.

பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, சுமார் 10 முதல் 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரியும் போது, அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்க வேண்டும்.

இறுதியில் ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை தாளித்து, குழம்பில் ஊற்றி கிளறிவிட்டால், சுவையான செட்டிநாடு தக்காளி குழம்பு ரெடி.