செப்டம்பர் 21, சென்னை (Kitchen Tips): குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சுவையான சத்து மிகுந்த சிற்றுண்டியாக முட்டைகோஸ் போண்டா (Cabbage Bonda) எப்படி செய்து கொடுப்பது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இது மிகவும் சுவையாக இருக்கும். இந்த முட்டைகோஸை (Cabbage) எப்போதும் போல பொரியல் செய்து கொடுப்பதிற்கு பதிலாக சுட சுட போண்டாவாக செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் - 200 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
மஞ்சள் தூள் - 5 தேக்கரண்டி
கடலை மாவு - கால் கப்
மிளகாய்த்தூள், தனியா தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் - தலா 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு. Chow Chow Kootu Recipe: சுவையாக செள செள கூட்டு செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
செய்முறை:
- முதலில் வெங்காயம் மற்றும் முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- அதனுடன் உப்பு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கடலை மாவு, தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- அடுத்து, கலந்து வைத்த கலவையுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும்.
- அடுத்து மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் அடுக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் போண்டாவை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். இப்படி அனைத்தையும் பொரித்து எடுத்துக்கொண்டால், சுவையான முட்டைகோஸ் போண்டா (Muttaikose Bonda) ரெடி.