செப்டம்பர் 21, சென்னை (Kitchen Tips): சீமை சுரைக்காய் எனப்படும் செள செள (Chayote) அறிவியல் ரீதியாக சுரைக்காய் குடும்பத்தை சேர்ந்த காய்கறி ஆகும். செள செள மெக்சிகோவை பூர்வீகமாக கொண்டதாகும். இதில், குறைந்த கலோரி கொண்ட ஊட்டச்சத்து மதிப்பிற்காக ஆரோக்கியமான காய்கறியாக கருதப்படுகின்றது. செள செள-வில் (Chow Chow) நம் உடலுக்கான தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவ்வாறு பல்வேறு பலன்களை கொண்ட செள செள கூட்டு (Chow Chow Kootu) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சௌ சௌ - 2
பாசி பருப்பு - அரை கப்
பச்சை மிளகாய் - 10
மிளகாய் வற்றல் - 2
தக்காளி - 1
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு. Paruppu Urundai Kuzhambu Recipe: செட்டிநாடு ஸ்டைலில் பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
வறுத்து பொடிப்பதற்கு தேவையானவை:
மிளகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - கால் தேக்கரண்டி
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
தாளிக்க தேவையானவை:
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
செய்முறை:
- முதலில் சௌ சௌவை தோல் சீவி சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கி கொள்ளவும். பின், தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் நருக்கிய சௌ சௌ, தக்காளி, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு, மிளகாய் வற்றல், மஞ்சள் தூள் சேர்த்து எல்லாம் மூழ்கும் அளவு நீர் சேர்த்து பருப்பு வேகும் வரை கொதிக்க விடவும்.
- நீர் வற்ற வற்ற சேர்த்து கொள்ளவும். பருப்பு வெந்ததும் கூட்டிற்கு தேவையான நீர் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
- ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை தாளித்து செள செள கூட்டில் கொட்டவும்.
- அவ்வளவுதான் ருசியான செள செள கூட்டு ரெடி.