செப்டம்பர் 14, சென்னை (Kitchen Tips): இனிப்புகள் என்றால் பெரும்பாலும் அனைவருக்கும் பிடிக்கும். வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள், பண்டிகைகள், திருவிழாக்கள் ஆகிய நிகழ்வுகளில் கண்டிப்பாக இனிப்பு வகைகள் இடம்பெறும். அந்தவகையில், உடலுக்கு ஆரோக்கியமான பீட்ரூட்டை (Beetroot) பயன்படுத்தி பீட்ரூட் லட்டு எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். பீட்ரூட்டில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து போன்ற பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் பீட்ரூட்டை சாப்பிடும் போது மூளையின் செயல்திறன் அதிகமாக இருக்கும். அந்தவகையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் பீட்ரூட் லட்டு (Beetroot Laddu) செய்து கொடுக்கலாம். Chilli Egg Masala Recipe: சில்லி முட்டை மசாலா சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - அரை கிலோ
சர்க்கரை - 2 கப்
ரவை - 2 கப்
காய்ச்சிய பால் - 1 கப்
முந்திரி - அரை கப்
ஏலக்காய் பொடி - 2 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
- முதலில் பீட்ரூட்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர், அதை மிக்ஸியில் போட்டு அரைத்து, பீட்ரூட் சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதனையடுத்து, ஒரு கடாயில் நெய் சேர்த்து காய்ந்ததும், முந்திரி பருப்புகளை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின்னர், அதே கடாயில் ரவையையும் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- ரவை பொன்னிறத்திற்கு வந்தவுடன், இதனுடன் ஏற்கனவே பிழிந்து வைத்துள்ள பீட்ரூட் சாறை சேர்த்து கிளறிவிடவும். இதனுடன் காய்ச்சி வைத்துள்ள பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.
- இறுதியாக ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி பருப்பையும் சேர்த்துக் கொள்ளவும். பீட்ரூட்டின் பச்சை வாசனை போகும் வரை கிளறி விட்டு, மிதமான சூட்டில் சிறுசிறு உருண்டைகளாக பிடித்து எடுத்தால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட் லட்டு ரெடி.