செப்டம்பர் 13, சென்னை (Kitchen Tips): முட்டையை வைத்து எப்போதும் ஒரே மாதிரியான முறையில் முட்டை குழம்பு, முட்டை தொக்கு செய்யாமல், சற்று வித்தியாசமாக செய்து சாப்பிடலாம். அந்தவகையில், சில்லி முட்டை மசாலா (Chilli Egg Masala) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முட்டை - 2
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 1 தேக்கரண்டி
கிராம்பு, பூண்டு - 2
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 1 கரண்டி
புளிக்கரைசல் - 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு. Ellu Laddu Recipe: எலும்புகளை வலுப்படுத்தும் எள்ளு லட்டு சுவையாக செய்து அசத்துவது எப்படி..?
செய்முறை:
- முதலில் கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். , அடுத்துவேக வைத்த முட்டையின் ஓட்டை எடுத்து விட்டு முட்டையை இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- வெங்காயம் வதங்கியதும், காய்ந்த மிளகாய்த்தூள் பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட் போட்டு நன்கு கிளறி விடவும். அதில் சோயா சாஸ், கெட்டியான புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.
- பின், இரண்டாக நறுக்கிய முட்டையை மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து, அதன் மேலாக கொத்தமல்லி இலையைத் தூவி பரிமாற வேண்டும். அவ்வளவுதான் சுவையான சில்லி முட்டை மசாலா ரெடி.