ஆகஸ்ட் 14, சென்னை (Kitchen Tips): கோவில்களில் பிரசாதமாக கொடுக்கப்படும் பொங்கல், சுண்டல் மற்றும் புளியோதரை என அனைத்திற்கும் தனித்துவமான ருசி உண்டு. அவற்றை உண்ணும்போதே அதே போன்று வீட்டில் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசை இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அருமையான சுவையில் பெருமாள் கோவில்களில் (Perumal Temple) பிரசாதமாக தரக்கூடிய பெருமாள் கோவில் புளியோதரை (Perumal Kovil Puliyodharai) எப்படி தயார் செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 4 கரண்டி
கடுகு - 2 கரண்டி
பெருங்காயம் - 1 கரண்டி
காய்ந்த மிளகாய் - 8
மஞ்சள் தூள் - 1 கரண்டி
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
புளிக்கரைசல்
அரிசி சாதம். Vendakkai Chilli Recipe: மொறு மொறுப்பான வெண்டைக்காய் சில்லி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
அரைக்க தேவையானவை:
கடலை பருப்பு - 2 கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 கரண்டி
மிளகு, மல்லி - தலா 2 கரண்டி
வெந்தயம் - 1 கரண்டி
காய்ந்த மிளகாய் - 6
வறுக்க தேவையானவை:
எண்ணெய் - தேவையான அளவு
கடலை பருப்பு - 2 கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 கரண்டி
வேர்க்கடலை - 3 கரண்டி
முந்திரி பருப்பு - 50 கிராம்
செய்முறை:
முதலில் புளியோதரை பொடியை தயார் செய்ய ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
பிறகு அதனுடன் மிளகு, மல்லி, வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் வறுக்கவும். இவை நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். Microplastics Found in Sugar And Salt: இந்தியாவில் விற்கும் உப்பு, சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக்.. வெளியான பகீர் ஆய்வு..!
பின்னர் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து, அதில் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அவற்றோடு வேர்க்கடலை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து வேறொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கி கொள்ளவும். அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும். அதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு, அவற்றை ஒரு மூடி வைத்து சுமார் 10 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும்.
நன்கு கொதித்த பின்னர், அதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துக்கொள்ளவும். மசாலாவை கலவை கொதித்த பிறகு தான் சேர்க்க வேண்டும். அவை நன்கு கொதித்து கீழே இறக்கும் போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது, வடித்து வைத்துள்ள சாதத்துடன் தனியாக வறுத்து வைத்துள்ள பருப்பு கலவையை முதலில் சேர்க்கவும். பிறகு கொதிக்க வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான பெருமாள் கோவில் புளியோதரை தயார்.