டிசம்பர் 04, சென்னை (Kitchen Tips): மதிய வேளையில் குழந்தைகளுக்கும் மற்றும் வீட்டில் உள்ள அனைவருக்கும் புதிய வெரைட்டி ரைஸ் செய்து கொடுக்க விரும்பினால், பூண்டு (Garlic) வைத்து மிக மிக எளிதான மற்றும் ருசியான பூண்டு சாதம் செய்து சாப்பிடலாம். இந்த பூண்டு சாதம் (Poondu Sadam) சுவையாக எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். Mutton Biryani Recipe: முனியாண்டி விலாஸ் மட்டன் பிரியாணி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
பூண்டு - 30 பல்
சாதம் - 750 கிராம்
வெங்காயம் - 2
உளுத்தம் பருப்பு - 1 கரண்டி
கடுகு - அரை கரண்டி
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
வேர்க்கடலை - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
சீரகம் - 1 கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடுபடுத்தி 50 கிராம் பச்சை வேர்க்கடலை, 6 காய்ந்த மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். இவற்றுடன் ஒரு கரண்டி சீரகம் சேர்த்து, இதை தனியாக ஆற வைத்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
- அதே பாத்திரத்தில் 8 கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, சூடானதும் 30 பல் பூண்டை இடித்து நன்கு நசுக்கி போட்டு வறுக்கவும். நல்லெண்ணெய் பயன்படுத்தினால் மட்டுமே பூண்டு சாதத்தின் முழு ருசியை உணர முடியும். பூண்டை மொறுமொறுப்பாக வறுக்கவும்.
- இதனையடுத்து கடாயில் இரண்டு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அரை கரண்டி கடுகு, ஒரு கரண்டி உளுத்தம் பருப்பு போட்டு, கடுகு வெடித்தவுடன் இரண்டு வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
- மஞ்சள் தூளின் பச்சை வாசனை போன பிறகு, ஏற்கெனவே வறுத்து அரைத்த வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் கலவையை சேர்க்கவும். தீயை குறைத்து 2 நிமிடங்களுக்கு கலந்துவிட்டு 750 கிராம் சாதம் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். அடுத்து நன்கு ஒரு நிமிடத்திற்கு கரண்டியை வைத்து கலந்துவிடவும். அவ்வளவுதான் சுவையான பூண்டு சாதம் ரெடி.