Lemon Ginger Mint Juice (Photo Credit: YouTube)

செப்டம்பர் 02, சென்னை (Kitchen Tips): வெயிலுக்கு இதமாக பல்வேறு குளிர்பானங்கள் இருக்கின்றன. அந்தவகையில், உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும், தேவையான சத்துகளை வழங்கவும் எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ் (Lemon Ginger Mint Juice) உதவுகிறது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது என்சைம் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், கல்லீரலைத் தூண்டுகிறது. எலுமிச்சை செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. தொடர்ந்து புதினா லெமன் ஜூஸ் உட்கொள்வது உடலைச் சிறப்பாக செயல்பட வைக்கிறது. இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Road Side Kalan Recipe: வீட்டிலேயே ரோட்டுக்கடை காளான் சுவையாக செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

தேவையான பொருட்கள்:

புதினா - 2 தேக்கரண்டி

இஞ்சி - ஒரு துண்டு (2 அங்குல அளவு)

எலுமிச்சை - 1

நாட்டுச் சர்க்கரை - 6 தேக்கரண்டி

உப்பு - சிறிதளவு

தண்ணீர் - 300 மில்லி லிட்டர்

செய்முறை:

முதலில் புதினாவை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அடுத்து, இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும்.

பின்னர், எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்க வேண்டும். இஞ்சி, புதினாவை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் நாட்டுச்சர்க்கரை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு எலுமிச்சைச் சாற்றையும் ஊற்றிக் கலக்கி வடிகட்டினால், சுவையான லெமன் இஞ்சி புதினா ஜூஸ் ரெடி.