Chicken Samosa (Photo Credit: YouTube)

ஜூன் 06, சென்னை (Kitchen Tips): மாலை நேரங்களில் வீட்டில் சுவையாக ஏதாவது செய்து சாப்பிட வேண்டும் என்று விரும்புவோம். அந்த வகையில், சிக்கன் சமோசா (Chicken Samosa) ஒரு பிரபலமான சிற்றுண்டியாக உள்ளது. இது ஒரு காரமான சிக்கன் நிரப்பப்பட்ட, வறுத்த மிருதுவான சமோசா ஆகும். இந்த சிக்கன் சமோசாவை எப்படி செய்வது என்பதனை இதில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 300 கிராம்

வெங்காயம் – 250 கிராம்

மைதா – 350 கிராம்

இஞ்சி, பூண்டு விழுது – அரை கரண்டி

பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி

நெய் – 3 தேக்கரண்டி

கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 4

கிராம்பு – 6

கொத்துமல்லி – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. Minor Girl Kidnap: 17 வயது சிறுமியை கடத்தி சென்ற பேருந்து நடத்துனர் கைது..!

செய்முறை:

முதலில், ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, அதனுடன் பேக்கிங் பவுடரை கலந்து தேவையான அளவில் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து சுமார் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர், சிக்கனை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்து மல்லி ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின், கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, கிராம்பு போட்டு தாளித்த பின், அதில் நறுக்கிய வைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

பின்னர், சிக்கன் கொத்துக்கறியை சேர்த்து வதக்கவும். சிக்கன் வெந்த பிறகு, அதில் உப்பு, கரம் மசாலா தூள் சேர்க்க வேண்டும். நல்ல மணம் வந்ததும் அதனை இறக்கி ஆற வைக்கவும்.

அடுத்து, பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக பிடித்து, வட்டமாக தேய்த்துக்கொள்ள வேண்டும். பின்பு, அதனை முக்கோண வடிவமாக செய்து சிக்கன் கலவையை வைத்து ஓரங்களில் சரியாக மூடவும்.

இறுதியாக, கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி, சமோசாவை போட்டு பொரித்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் சமோசா ரெடி.