Mullangi Keerai Masala (Photo Credit: YouTube)

அக்டோபர் 03, சென்னை (Kitchen Tips): நாம் பெரும்பாலும் முள்ளங்கியை வைத்து முள்ளங்கி பொரியல், முள்ளங்கி சாம்பார் இப்படி செய்து சாப்பிட்டுருப்போம். ஆனால், இந்த முறையில் முள்ளங்கி கீரை (Radish Spinach) வைத்து சுவையாக முள்ளங்கி கீரை மசாலா (Mullangi Keerai Masala) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி - 2

முள்ளங்கிக் கீரை - 1 கப் (உப்புத் தண்ணீரில் வேகவைக்கவும்)

கடுகு - 1 கரண்டி

மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் - தலா அரை தேக்கரண்டி

பெருங்காயம் - கால் கரண்டி

சீரகம் - கால் கரண்டி

சர்கக்ரை - அரை கரண்டி

எலுமிச்சை சாறு - அரை கரண்டி

கரம் மசாலா - 1 கரண்டி

எண்ணெய், உப்பு - தேவையான அளவு. Karuvepillai Kulambu Recipe: கறிவேப்பிலை குழம்பு இப்படி செய்யுங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க.. அசத்தல் டிப்ஸ் இதோ..!

செய்முறை:

  • முதலில் முள்ளங்கியை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போடவும். முள்ளங்கிக் கீரையையும் நறுக்கி அதில் சேர்க்கவும்.
  • பிறகு உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் வைக்கவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • அடுத்து தயாராக வைத்துள்ள முள்ளங்கி மற்றும் அதன் கீரைத் துண்டுகளை அதில் சேர்க்கவும். நன்கு கலந்து வேகவைத்துள்ள முள்ளங்கிக் கீரையையும் சேர்த்துக் கிளறவும்.
  • பின் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு வேகவைக்க வேண்டும்.
  • சுமார் 4 நிமிடங்கள் வெந்ததும், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். முள்ளங்கி நன்கு வெந்ததும் எடுத்துப் பறிமாறவும். அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி கீரை மசாலா ரெடி.