செப்டம்பர் 12, சென்னை (Kitchen Tips): குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இனிப்பு வகை என்றால் மிகவும் பிடிக்கும். அந்தவகையில், வீட்டில் சமைக்கும் இனிப்பு வகை ஆரோக்கியமாக இருந்தால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அப்படிப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு கவுனி அரிசி வைத்து பாயசம் (Kavuni Arisi Payasam) செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம். கவுனி அரிசி (Kavuni Rice) என்பது செட்டிநாட்டில் மிக முக்கியமான ஒரு உணவுப் பொருளாகும்.
தேவையான பொருட்கள்:
கருப்பு கவுனி அரிசி - அரை கப்
வெல்லம் - அரை கப்
பால் - அரை கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 2
முந்திரி, திராட்சை, பிஸ்தா - சிறிதளவு
தண்ணீர் - 5 கப். Vegetable Biryani Recipe: வெஜிடபிள் பிரியாணி சுவையாக செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
செய்முறை:
- முதலில் கருப்பு கவுனி அரிசியை தண்ணீர் ஊற்றி, நன்கு கழுவி 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, இந்த கவுனி அரிசியில் இருக்கும் தண்ணீரை வடித்து எடுத்து அரிசியை ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர், ஒரு குக்கரில் 5 கப் தண்ணீர் ஊற்றி, அரைத்து வைத்த கவுனி அரிசி பொடியை சேர்த்து 5 அல்லது 6 விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும். இதனையடுத்து, குக்கரில் இருந்து எடுத்து வேறொரு சிறிய பாத்திரத்திற்கு மாற்றி மிதமான சூட்டில் வைத்து, அதில் தேவையான அளவு பால் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும்.
- இப்போது, இதில் தேவையான அளவு வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து விடவும். வெல்லம், பாலுடன் நன்கு கரைந்து வந்ததும் ஒரு கடாயில் நெய் சேர்த்து தேவையான அளவு முந்திரி, பிஸ்தா, திராட்சை சேர்த்து நன்றாக பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுக்கவும்.
- பிறகு நெய்யில் வறுத்து எடுத்த நட்ஸ் வகைகளை, பாலில் சேர்த்து சிறிதளவு ஏலக்காய் பொடி தூவி இறக்கினால் சுவையான மற்றும் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் அளிக்கக்கூடிய கருப்பு கவுனி அரிசி பாயசம் ரெடி.