Pasiparuppu Pakoda (Photo Credit: YouTube)

நவம்பர் 05, சென்னை (Kitchen Tips): விடுமுறை தினங்களில் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஏதாவது செய்து கொடுக்க விரும்பினால், சத்தாகவும் சுவையானதாகவும் பாசிப்பருப்பு (Moong Dal) வைத்து பக்கோடா செய்து கொடுக்கலாம். இது குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான ஆரோக்கியமான சிற்றுண்டியாகும். பாசிப்பருப்பு பக்கோடா (Pasiparuppu Pakoda) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். North Indian Style Pea Gravy Recipe: சப்பாத்திக்கு ஏற்ற வட இந்திய ஸ்டைல் பட்டாணி கிரேவி செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்

தனியா - 2 தேக்கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தனியா, சோம்பு இரண்டையும் ஒன்றிண்டாகப் பொடிக்கவும்.
  • பாசிப் பருப்பை தண்ணீர் வடித்து சற்று கரகரப்பாக அரைக்க வேண்டும். அடுத்து, எண்ணெயை தவிர மற்ற பொருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து காய்ந்த எண்ணெயில் சிறு சிறு உருண்டைகளாக வேகவிட்டு எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான பாசிப்பருப்பு பக்கோடா ரெடி. இது வட இந்தியாவில் ஸ்பெஷல் பக்கோடா ஆகும். இதற்கு தொட்டுக் கொள்ள சட்னி நல்ல சைட் டிஷ் ஆக இருக்கும்.