ஜனவரி 10, சென்னை (Kitchen Tips): பொங்கல் பண்டிகை நெருங்கி வந்துவிட்டது. இந்த பொங்கல் பண்டிகையன்று வித்தியாசமான ஒரு பொங்கலை (Pongal Special Recipes) செய்ய நினைத்தால், இந்த வருடம் பால் பொங்கலை செய்யுங்கள். இது செய்வது மிகவும் சுலபமானதாகும். முக்கியமாக, இந்த பால் பொங்கலை குக்கரிலேயே செய்யலாம். இதனை செய்வதற்கு அதிக பொருட்கள் தேவைப்படாது. அப்படிப்பட்ட சுவையான பால் பொங்கல் (Pal Pongal) எப்படி செய்வதென்று இப்பதிவில் காண்போம். Pongal Special Recipes: அசத்தலான சுவையில் வெண்பொங்கல் செய்வது எப்படி? டிப்ஸ் உள்ளே.!
தேவையான பொருட்கள்:
பால் - 4 கப்
பச்சரிசி - ஒரு கப்
நெய் - 2 தேக்கரண்டி
வெல்லம் - முக்கால் கப்
ஏலக்காய் பொடி - ஒரு தேக்கரண்டி
நெய் - 4 மேசைக்கரண்டி
முந்திரி - 20
உலர் திராட்சை - 20
செய்முறை:
- முதலில் பச்சரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ளவும். பின் ஒரு குக்கரில் கழுவிய பச்சரிசியைப் போட்டு, அதில் ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் பாலை ஊற்றி கிளறி, குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, குறைவான தீயில் 4 விசில் விட்டு இறக்கவும்.
- பின்னர், குக்கரைத் திறந்து கரண்டியால் நன்கு கிளறிவிட்டு, பின் அதில் வெல்லம் போட்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.
- அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி, முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் உலர் திராட்சையைப் போட்டு வதக்கி இறக்கி, குக்கரில் உள்ள பொங்கலில் ஊற்றவும்.
- இறுதியில், அதில் 4 மேசைக்கரண்டி நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான பால் பொங்கல் ரெடி.