Rose Flower Payasam (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 27, சென்னை (Kitchen Tips): எப்போதும் போல ஒரே மாதிரியான பாயசம் செய்து சாப்பிடுவதைவிட, வித்தியாசமான முறையில் அதுவும் ரோஜாப் பூவை (Rose Flower) பயன்படுத்தி எப்படி சுவையாக பாயசம் செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். ரோஜாப் பூ பாயசம் (Rose Flower Payasam) மிகவும் சுவையாக இருக்கும். இது மன அமைதிக்கு வழிவகுக்கும்.

தேவையான பொருட்கள்:

பன்னீர் ரோஸ் இதழ்கள் - 2 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

முந்திரி - 20

ஏலக்காய் - 4

காய்ச்சிய பால் - அரை லிட்டர்

நாட்டுச்சர்க்கரை - 150 கிராம். Vazhaithandu Poriyal Recipe: வாழைத்தண்டு பொரியல் சுவையாக செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

செய்முறை:

முதலில் ரோஜா இதழ்களை அரை டம்ளர் தண்ணீர்விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். அடுத்து பாலை காய்ச்சி ஆற வைக்க வேண்டும்.

பின்னர் முந்திரி, ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ந்தவுடன் முந்திரி, தேங்காய் துருவல், ஏலக்காய் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும்.

இது கெட்டியாகும் போது காய்ச்சிய பால், நாட்டுச்சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் இறக்கி, அரைத்த ரோஜா விழுதை சேர்த்து நன்கு கலந்து மூடி வைக்க வேண்டும்.

அவ்வளவுதான் சுவையான பன்னீர் ரோஜாப்பூ பாயசம் ரெடி. இதனை குளிர வைத்தும் பருகலாம்.