டிசம்பர் 31, சென்னை (Kitchen Tips): தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு சூப்பரான சைடிஷ் ஆக சேனைக்கிழங்கை (Elephant Foot Yam) வைத்து சுவையான பொரியல் செய்து சாப்பிடலாம். சேனைக்கிழங்கு பொரியல் ருசியாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இந்த சேனைக்கிழங்கு பொரியல் (Senai Kizhangu Poriyal) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். Egg Paniyaram Recipe: மாலை நேரத்திற்கு ஏற்ற சுவையான ஸ்நாக்ஸ்.. முட்டை பணியாரம் செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு - கால் கிலோ
மஞ்சள் தூள் - அரை கரண்டி
உப்பு - தேவையான அளவு
மசாலா அரைக்க தேவையானவை:
தேங்காய் துருவல் - ஒரு கப்
மிளகாய் வற்றல் - 2
கடுகு - 1 கரண்டி
சீரகம் - அரை கரண்டி
தாளிக்க தேவையானவை:
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 1
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் சேனைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கவும். அடுத்து, ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க ஆரம்பித்ததும், நறுக்கிய சேனைத் துண்டுகளை சேர்த்து தட்டைப் போட்டு மூடி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேக விடவும்.
- பின், குழைந்து விடாமல் அதே சமயம் நன்கு வெந்ததும் எடுத்து நீரை வடித்து விட்டு தட்டில் ஆற வைக்கவும். மிக்ஸியில் தேங்காய் துருவல், மிளகாய், கடுகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அடுத்து, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு மிளகாய் வற்றலை போட்டு கடுகு பொரிந்ததும் வெந்த சேனைக்கிழங்கை சேர்த்து கிளறிவிடவும்.
- பிறகு கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துக்கிளறி இறக்க வேண்டும். அவ்வளவுதான் ருசியான சேனைக்கிழங்கு பொரியல் ரெடி.