அக்டோபர் 28, சென்னை (Kitchen Tips): வீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகை தான், சர்க்கரை வள்ளிக்கிழங்கு (Sweet Potato) அல்வா. சர்க்கரை வள்ளிக்கிழங்கு மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்ததாகும். சர்க்கரை வள்ளிக் கிழங்கில் புரதம், விட்டமின் ஏ, விட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச் சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில், இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா (Sweet Potato Halwa) எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். Ragi Laddu Recipe: தீபாவளி ஸ்பெஷல்! கேழ்வரகு லட்டு செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 2
பால் - 1 கப்
சர்க்கரை - அரை கப்
நெய் - 3 கரண்டி
ஏலக்காய்பொடி - கால் கரண்டி
முந்திரி - 10 (சிறு துண்டுகளாக நறுக்கியது)
திராட்சை - 10
கேசரி பவுடர் - 1 சிட்டிகை
செய்முறை:
- முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் நன்கு வேகவைத்து மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- அதே பாத்திரத்தில் மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து நெய்யில் ஒரு சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர், பால் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
- பால் வற்றி கிழங்கும் நன்கு கலந்ததும் சர்க்கரையை சேர்த்து கலவை சிறிது இளக்கமாக இருக்கும்போது தொடர்ந்து கிளறிவிட்டு, சர்க்கரை கரைந்ததும் கலவை உறைந்துவிடும்.
- அந்த நேரத்தில் ஏலக்காய்பொடி சேர்த்து நறுமணம் வரும்போது மீதம் உள்ள நெய்யை சேர்த்து ஹல்வா சட்டியில் பிடித்து விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
- கலவை இறுகி பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் நெய் பிரிந்து வரும்போது, அடுப்பில் இருந்து இறக்கி வைத்து மேலே வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு அல்வா ரெடி.