செப்டம்பர் 18, சென்னை (Kitchen Tips): வெண்டைக்காயில் (Okra) நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இந்த வெண்டைக்காயை (Ladies Finger) வைத்து வெண்டைக்காய் பருப்பு சாதம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். அந்தவகையில் வெண்டைக்காய் பருப்பு சாதம் (Vendakkai Paruppu Sadam) செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - அரை கிலோ
தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 10 பல்
சாதம் - 4 கப்
துவரம் பருப்பு - 100 கிராம்
சீரகத்தூள் - அரை கரண்டி
மஞ்சள் தூள் - கால் கரண்டி
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. Orange Vanilla Rice Kheer Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரஞ்சு வெண்ணிலா ரைஸ் கீர் செய்வது எப்படி..?
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பைப் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு அலசி தண்ணீரை வடிகட்டி, அதில் தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து வேகவைக்க வேண்டும்.
- அடுத்து வெண்டைக்காயை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய், தேவையான அளவு உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து வதக்கி வைத்துக் கொள்ளவும்.
- வெண்டைக்காயில் உள்ள பசை நீங்கியதும், அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி, அதனுடன் வேகவைத்த துவரம் பருப்பை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- பின் ஒரு கொதி வந்ததும், அதில் சாதத்தை கொட்டி கிளறி இறக்கினால், சுவையான வெண்டைக்காய் பருப்பு சாதம் ரெடி.