ஜனவரி 18, சென்னை (Kitchen Tips): ஒரு பாரம்பரிய ஆந்திர உணவு எப்போதும் காரசாரமான, சூடான உணவை கொண்டிருக்கும். இதில் பச்சடி ரெசிபிகள் பெரும்பாலும் தக்காளி, கத்தரிக்காய், பாகற்காய், சுரைக்காய், கேரட் போன்ற அனைத்து வகையான காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அந்தவகையில், தக்காளி பச்சடி முக்கியப்பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட சுவையான தக்காளி பச்சடி (Thakkali Pachadi) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். Urulai Kilangu Kara Kari: உருளைக்கிழங்கு கார கறி செய்வது எப்படி? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் - 5
நறுக்கிய தக்காளி - 2 கப்
கடலைப்பருப்பு - 1 கரண்டி
உளுத்தம் பருப்பு - முக்கால் கரண்டி
சீரகம், மஞ்சள் - தலா அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு கரண்டி
பூண்டு - 3 பல்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையானவை:
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 1
சீரகம், கடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1 சிட்டிகை
பெருங்காயம் - சிறிதளவு
பூண்டு - 1 பல்
செய்முறை:
- ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்துத் தாளிக்கவும். அவை பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
- பிறகு சீரகம் சேர்த்து சில நொடிகள் வறுக்கவும். பச்சை வாசனை போனதும் அதனை குளிர வைக்கவும். அதே கடாயில் தக்காளி, பூண்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். தக்காளி முற்றிலும் மென்மையாக மாறும் வரை வதக்க வேண்டும்.
- நன்கு வெந்ததும் குளிர வைக்கவும். பின், ஒரு மிக்ஸியில் வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் சேர்க்கவும். அவற்றை நன்றாக பொடி யாக அரைக்கவும். தக்காளி சேர்த்து அரைக்கவும். எப்படிப்பட்ட பதத்தில் பச்சடி வேண்டுமோ அவ்வளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
- அதன்பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சட்னியைத் தாளிக்க கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, கடுகு சீரகம், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்க்கவும். விரும்பினால், ஒரு பல் பூண்டு சேர்க்கலாம். கறிவேப்பிலை மிருதுவாக மாறும்வரை வதக்கிவிட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர், கடாயில் பச்சடியை சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவுதான் சுவையான தக்காளி பச்சடி ரெடி.