அக்டோபர் 19, சென்னை (Kitchen Tips): நம் வீட்டில் சாம்பார் சாதம், தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம் என பல வெரைட்டி சாதங்களை நாம் சாப்பிட்டு இருப்போம். ஆனால், வத்தக்குழம்பு சாதம் (Vatha Kuzhambu Sadam) சுவையாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். வத்தக்குழம்பு சாதம் மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இதனை வீட்டில் ருசியாக எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். Chettinad Vazhakkai Varuval Recipe: செட்டிநாடு ஸ்டைலில் வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பூண்டு - 100 கிராம்
புளி - 100 கிராம்
மல்லித் தூள் - 40 கிராம்
மிளகாய் தூள் - 20 கிராம்
வெல்லம் - 25 கிராம்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கருவடகம் - தேவையான அளவு
குழம்புத்தூள் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
மணத்தக்காளி வத்தல் - 50 கிராம்
நல்லெண்னெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் புளியை 2 மணிநேரம் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். பின், ஊற வைத்த புளி தண்ணீரில் கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உடைந்த வெல்லம், தேவையான அளவு உப்பு, குழம்புத்தூள், தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து சுமார் 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
- அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும், எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி காய வைக்கவும். இதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
- வெங்காயம், பூண்டு பாதி வதங்கியவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து எண்ணெய்யில் கருவடகம், இடிச்ச பூண்டு, மணத்தக்காளி வத்தல் சேர்த்து வதக்கி, ஏற்கனவே உள்ள கலவையில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மேலும், பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.
- இதனை, அடுப்பில் வைக்கப்பட்டுள்ள வடித்து வைக்கப்பட்ட சாதத்தில் சேர்த்து கிளறிவிட வேண்டும். இதனுடன் நல்லெண்னெய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறிவிடவும். அவ்வளவுதான் சுவையான வத்தல்குழம்பு சாதம் ரெடி.