நவம்பர் 19, சென்னை (Kitchen Tips): நம் வீட்டில் உள்ள கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை கொண்டு சுவையான வெள்ளை குருமா செய்து சாப்பிடலாம். இந்த வெள்ளை குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் ருசியாக இருக்கும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சூப்பராக இருக்கும். அப்படிபட்ட வெள்ளை குருமா (White Kurma) எப்படி செய்வதென்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 1
சோம்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1 (நறுக்கியது)
காய்கறிகள் - 1 கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு)
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு. Mysore Pak Recipe: வீட்டிலேயே சுவையாக மைசூர் பாக் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
அரைக்க தேவையானவை:
துருவிய தேங்காய் - 1 கப்
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
முந்திரி - 5
பச்சை மிளகாய் - 5
ஏலக்காய் - 2
கிராம்பு - 1
பட்டை - 1
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய், பொட்டுக்கடலை, சீரகம், சோம்பு, முந்திரி, கிராம்பு, ஏலக்காய், பட்டை, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்னர், அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவும்.
- காய்கறிகள் ஓரளவு வெந்ததும், அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
- விசில் போனதும் குக்கரைத் திறந்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், அவ்வளவுதான் சுவையான வெள்ளை குருமா ரெடி.