ஆகஸ்ட் 29, சென்னை (Chennai News): சென்னை பெசண்ட் நகரில் (Besant Nagar) வேளாங்கண்ணி மாதா கோவில் 10 நாள் திருவிழாவையொட்டி, இன்று (ஆகஸ்ட் 29) மாலை 4.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாதா கோவில் திருவிழா (Annai Velankanni Festival) இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி வருகின்ற செப்டம்பர் 08-ஆம் தேதி அன்று நிறைவடைகிறது. கொடியேற்றத்திற்கு (Festival Flag Hoisting) பிறகு, நற்கருணை தேர் ஊர்வலம் தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு, 6-வது அவென்யூ பீச் ரோடு, 3-வது மெயின் ரோடு, 2-வது அவென்யூ, 7-வது அவென்யூ வழியாக மீண்டும் தேவாலயத்திற்கு வரும். Velankanni Cathedral Festival: வேளாங்கண்ணி பேராலய திருவிழா - இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
திருவிழாவையொட்டி (Festival) தேவாலயத்தில் நாள்தோறும் சிறப்பு பிராத்தனைகள், நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதனால், குறிப்பிட்ட நாட்களுக்கு சென்னை பெசண்ட் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
பயணிகள் கவனத்திற்கு!
"அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகர்" ஆண்டு விழா - 2024, இன்று (29.08.2024) வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 08.09.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நிறைவடைகிறது.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக பயணிகளின் வசதிக்காக சென்னையின் பல்வேறு… pic.twitter.com/Q46hh4CLw7
— MTC Chennai (@MtcChennai) August 29, 2024
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை:
அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் பெசன்ட் நகர் ஆண்டு விழா-2024 தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையின் ஏற்பாடு!
29.08.2024 to 08.09.2024
Traffic diversions and Parking Places notified.
Public are requested to co-operate. #Chennai #Traffic #Police @R_Sudhakar_Ips pic.twitter.com/0rDSAMC9Ek
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) August 28, 2024