ஏப்ரல் 30, புதுடெல்லி (New Delhi): சர்வதேச ஜாஸ் தினம் (International Jazz Day) என்பது 2011 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் அறிவிக்கப்பட்ட ஒரு சர்வதேச தினமாகும். ஜாஸ் பியானோ மற்றும் UNESCO நல்லெண்ண தூதர் ஹெர்பி ஹான்காக்கின் (Herbie Hancock) யோசனையின் பேரில் இந்த நாள் உருவாக்கப்பட்டது. ஜாஸ் மூலம் உலகின் அனைத்து மூலைகளிலும் மக்களை ஒன்றிணைப்பதில் அதன் இராஜதந்திர பங்கை எடுத்துக்காட்டுகிறது. இது ஆண்டுதோறும் ஏப்ரல் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஜாஸ்: ஜாஸின் (Jazz) இசை வடிவம் ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்டது. இது ஐரோப்பிய ஹார்மோனிக் அமைப்பு மற்றும் ஆப்பிரிக்க தாளங்களால் உருவானது. இது 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் தென் அமெரிக்க அடிமை காலனிகளில் மட்டுமே பார்க்கக்கிடைத்த இந்த ஜாஸ், கருப்பர்கள் அமெரிக்காவின் நகரங்களுக்கு பரவ பரவ மேலும் பிரபலமாகியது. இது மேலும் பல இடங்களுக்கு சென்று சேர, இந்த வகை இசையின் பல்வேறு உருவகங்களும் வெளி வர ஆரம்பித்தன. இதனால் அந்தந்த இடத்திற்கு ஏற்றார்போலும், இசையின் வேகம், ஜதி போன்ற பல விஷயங்களினாலும் ஜாஸில் பல்வேறு பிரிவுகள் உண்டு. Goat Gives Birth to 7 Babies: ஒரே பிரசவத்தில் 7 குட்டிகளை ஈன்ற ஆடு.. ஆச்சர்யமூட்டும் வீடியோ வைரல்..!
எத்தனை பிரிவுகள் வந்தாலும் ஜாஸின் அடிப்படை தத்துவங்கள் ஆன சுதந்திரமான இசை ஓட்டம். சுதந்திர வேட்கைக்கான பிரதிபலிப்பாக கருதப்படும் இந்த இசையில் கலைஞரின் தனித்திறமையை வெளிக்கொணரும் விதமாகவே பாடல்கள் அமைந்திருக்கும். களிப்பூட்டும் நிகழ்ச்சியாக தொடங்கிய ஜாஸ் இன்று மிகக் கூர்ந்து கேட்டு ரசிக்கும் தனிக்குழுக்களுக்காக என்று ஆகிவிட்டிருக்கிறது. இன்று ஜாஸ் கேட்பது ஒரு intellectual exercise என்று ஒரு இசை விமர்சகர் குறிப்பிட்டிருக்கிறார்.