ஜனவரி 19, சென்னை (Health Tips): வாழை மரத்தின் இலை, மரம், பூ (Banana Flower), தண்டு என அதன் பாகங்கள் பல நன்மைகள் கொண்டவை. வாழை இலையில் நாம் உணவு வைத்து சாப்பிட்டு அதன் சத்துக்களை பெறுவதை போல, வாழைப்பழம், வாழைப்பூ ஆகியவற்றை நேரடியாக சாப்பிட்டு பல நன்மைகளை பெறலாம். வாழைத்தண்டையும் சமைத்து சாப்பிடலாம். வாழை மரத்தை வெட்டி, அதில் தரைக்கு மேல் சிறிது மரத்திற்குள் குழிவெட்டி ஊறும் நீரை குடித்தால் சிறுநீரக கற்கள் சார்ந்த பிரச்சனை விரைந்து சரியாகும். இன்று வாழைப்பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்: வாழையின் கொடைகளில் ஒன்றான வாழைப்பூழ்வில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பிரஸ், இரும்புசத்து, ஜின்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சந்திக்கும் வெள்ளைப்படுதல், வயிற்று வலி சார்ந்த பிரச்சனையையும் வாழைப்பூ சரி செய்யும். மாதவிடாய் கோளாறுகள் தொடர்பான விஷயங்களுக்கும் தீர்வாக அமைக்கும்.
மூலம், மலட்டுத்தன்மைக்கு அருமருந்து: மனித உடலில் உள்ள இரத்தத்தில் சேரும் தேவையில்லாத கொழுப்புகள் சரியாகும். இரத்த ஓட்டம் என்பது சீராகி, உடல் நலம்பெறும். வயிற்று வலி சார்ந்த பிரச்சனை உடையோர், வாழைப்பூவினை சமைத்து சாப்பிடலாம். உடலின் வெப்பநிலையையும் இது குறைக்க உதவும். மலட்டுத்தன்மை பிரச்சனையால் அவதிப்படுவோர், வாழைப்பூவினை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும். இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சோகை சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகளும் வாழைப்பூவினை எடுத்துகொள்ளலாம். மூலப்பிரச்னைகளுக்கு அருமருந்தாக வாழைப்பூ இருக்கிறது. Khelo India Youth Games 2023: தமிழகத்திற்கே பெருமை... கேலோ இந்தியா போட்டிகளை நேரலையில் பார்ப்பது எப்படி?.. முழு விபரம் இதோ.!
பிடித்த வகையில் செய்து சாப்பிடுங்கள்: இப்பூவினை கடைகளில் வாங்கி, நரம்புகளை நீக்கி நன்றாக வேகவைத்து அவியல், பொரியல், கூட்டு, வடை என பல வகைகளில் இதனை சாப்பிடலாம். வீட்டில் பெரும்பாலும் குழந்தைகள் வாழைப்பூ பொரியல், கூட்டு போன்றவை வேண்டாம் என ஒதுக்கினால், அவர்களுக்காக வாழைப்பூ வடை செய்து கொடுக்கலாம்.
வாழைப்பூ வடை: இது சாதாரண பஜ்ஜி பஜ்ஜியை தயார் செய்வது போன்று சுலபமானது என்பதால், கடலை மாவு மற்றும் அரிசி மாவு பாக்கெட், தேவையான அளவு உப்பு போன்றவை சேர்த்து எளிதில் சமைத்து சாப்பிடலாம். வாழைப்பூ வடை குழந்தைகளால் விரும்பி சாப்பிடப்படும், உடலுக்கும் நல்லது.