Nellai School Issue (Photo Credit: YouTube)

ஏப்ரல் 15, பாளையங்கோட்டை (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் (Palayamkottai) தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில், மாணவர் ஒருவர் தன்னுடன் பயிலும் சக மாணவரை அரிவாளால் வெட்டியுள்ளார். அதைத் தடுக்கச் சென்ற ஆசிரியருக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இதில், காயமடைந்த்த மாணவர் மற்றும் ஆசிரியர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். Namakkal News: கழண்டு ஓடிய அரசு பேருந்தின் முன் சக்கரம்.. அலரியடித்த பயணிகள்..!

மாணவருக்கு அரிவாள் வெட்டு:

இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், இரு மாணவர்களுக்கும் இடையே பென்சில் வாங்குவதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஏற்பட்ட தகராறு காரணமாக, அரிவாளை வீட்டில் இருந்து பையில் மறைத்து எடுத்து வந்து சக மாணவரை அரிவாளால் வெட்டியது தெரியவந்துள்ளது. தற்போது, மாணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.