Chennai Cyber Crime Case (Photo Credit: YouTube)

ஏப்ரல் 16, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வரும் மணிப்பூரை (Manipur) சேர்ந்த 19 வயது இளம்பெண், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இளம்பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் இருக்கக்கூடிய வாட்ஸ் ஆப் குழுவில், அந்த இளம்பெண் நிர்வாணமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், இதுகுறித்து கேட்டப்போது, அதில் இருப்பது நான் இல்லை என கூறியுள்ளார். இதனால் தான் மிகுந்த மன வேதனை அடைந்திருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். Nellai News: 8ஆம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு.. சக மாணவர் வெறிச்செயல்.., நெல்லையில் பயங்கரம்..!

இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த கும்பல்:

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் அருண் கூறுகையில், ஏஐ தொழில்நுட்பம் மூலம் இவ்வாறு ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கி, இளம்பெண்ணை மிரட்டியுள்ளனர். மேலும், இளம்பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு சென்று, ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்து, அதனை வீடியோ எடுத்து அனுப்ப வற்புறுத்தியுள்ளனர், இல்லையெனில், ஏஐ (AI) மூலம் உருவாக்கிய ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி வந்துள்ளனர். மேலும், இந்த சைபர் கிரைம் கும்பல், ஏஐ மூலமாக உருவாக்கிய இளம்பெண்களின் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்து, அதனை பிட் காயின் மூலமாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி தகவல்:

நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 70 சதவீதம் பெண்கள் புகார் கொடுக்க முன்வரவில்லை எனவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இளம்பெண் அளித்த புகாரின்பேரில், சைபர் கிரைம் (Cyber Crime) காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.