Husband Stabs Pregnant Wife in AP (Photo Credit: @ndtv X)

ஏப்ரல் 15, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தைச் (Visakhapatnam) சேர்ந்தவர் அனுஷா (வயது 27). இவர், ஞானேஷ்வர் என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இத்தம்பதி பி.எம். பாலேம் பகுதியில் உள்ள உடா காலனியில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அனுஷா எட்டு மாத கர்ப்பமாக இருந்துள்ளார். Nursing Course Scam: நர்சிங் பயிற்சி அளிப்பதாக மோசடி.. வெளியான பரபரப்பு தகவல்..!

கர்ப்பிணி பெண் கத்தியால் குத்திக் கொலை:

இந்நிலையில், அனுஷா மற்றும் ஞானேஷ்வர் இடையே நேற்று (ஏப்ரல் 14) காலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஞானேஷ்வர், வீட்டில் இருந்த கத்தியை (Husband Stabs Pregnant Wife) எடுத்து தனது காதல் மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், 8 மாத கர்ப்பிணியான அனுஷா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து மயங்கினார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தவிட்டதாக தெரிவித்தனர்.

கணவர் கைது:

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மேலும், தலைமறைவாக இருந்த ஞானேஷ்வரை நேற்று மாலை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.