Terrorism (Photo Credit: Pixabay)

மே 21, புதுடெல்லி (New Delhi): இந்திரா மற்றும் பெரோஸ் காந்தியின் மூத்த மகனான ராஜீவ் காந்தி (Rajiv Gandhi), 1984 ஆம் ஆண்டு தனது தாயாரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸின் பொறுப்பை ஏற்றார். தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ராஜீவ் காந்தி உயிரிழந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரின் நினைவு தினத்தை இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக (National Anti-Terrorism Day) அனுசரிக்கின்றனர். Narasimha Jayanthi 2024: எதிரிகள் தொல்லையை வேரறுக்கும் நரசிம்மர் வழிபாடு; 2024 நரசிம்ம ஜெயந்தி நல்ல நேரம், வழிபாடு முறைகள் விபரம் இதோ.!

தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினத்தின் முதன்மை நோக்கம் நாட்டிற்குள் நடக்கும் அனைத்து வகையான பயங்கரவாத நடவடிக்கைகளையும் எதிர்ப்பதும் கண்டிப்பதும் ஆகும். மேலும் நல்லிணக்கம், சகோதரத்துவம், அமைதி, ஒற்றுமை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றால் உலகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.