ஜூன் 07, சென்னை (Health Tips): இன்றைய மோசமான வாழ்க்கை முறைகள் மற்றும் உணவு முறை காரணமாக, இளம்வயதினர்களுக்கும் மாரடைப்பு பிரச்னைகள் ஏற்படுகிறது. 50 வயதிற்கு மேல் ஏற்பட்ட இதய நோய்கள் (Heart Disease), தற்போது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்படுகின்றன. இந்த நிலையில், மாரடைப்பு (Heart Attack) போன்ற இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று இதில் பார்ப்போம்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தல்: இதய நோயைத் தடுக்க முதலில், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும். மேலும், இரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏற்கனவே BP இருந்தால், மருத்துவரின் சிறந்த ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு: இதய நோய்களை உண்டாக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுடன் கூடிய வழக்கமான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளவது நல்லது. Medical Student Drowned In The River: ரஷ்யாவில் 4 இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலி..!
ஆரோக்கியமான உணவு: தினசரி சரியான அளவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை உட்கொள்வது நம்மை ஆரோக்கியமாக (Healthy Food) வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால், தற்போது அதிகளவில் எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் துரித உணவுகளை அதிகம் உட்கொள்கின்றனர். இது நமது உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இளம் வயதிலேயே மாரடைப்பு வராமல் தடுக்க ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமாகும்.
உடற்பயிற்சி: இது, நம் இதயத்தை வலிமையாக்குவது மட்டுமல்லாமல் பிபி மற்றும் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கின்றது. தினசரி வழக்கத்தில் சில முக்கியமான உடற்பயிற்சிகளை (Exercise) செய்ய வேண்டும். தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி செய்தால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 7% குறைக்கலாம் என கூறப்படுகிறது.
உடல் எடை கட்டுப்பாடு: அதிக உடல் எடை (Body Weight) இதயத்தில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. இது நம் இதய பிரச்சனைகளின் ஆபத்தை அதிகரிக்கிறது. எனவே, சீரான உணவை உட்கொள்வதன் மூலமும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலமும் நம் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
மன அழுத்தத்தைத் தவிர்த்தல்: அதிக மன அழுத்தம் இதய ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை விளைவிக்கிறது. எனவே, மன அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். தினமும் தியானம், யோகா, ஆழ்ந்த சுவாசம் ஆகியவற்றை செய்து வருவது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். மேலும், போதுமான அளவு தூக்கம் இருக்க வேண்டும். மிக முக்கியமாக மது, போதைப்பொருள் மற்றும் புகைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.