ஏப்ரல் 12, சென்னை (Chennai): இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான (General Election 2024) அட்டவணையை கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி, ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
யார் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் என்பதனை தாண்டி, 100% வாக்கு பதிவுக்காக இந்திய நாடானது போராடி வருகிறது. அரசியல் என்பது சிலருக்கு புரியாத புதிராக இருந்தாலும் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, திட்டங்கள், அடிப்படை தேவைகள், சுகாதாரம் போன்றவைகளில் நம்முடைய நகர்ப்புற வளர்ச்சி எந்த இடத்தில் இருக்கின்றது என்பதனை நாம் அறிந்து கொள்வது நம்முடைய கடமை அல்ல உரிமை ஆகும். Health Tips for Eating Foods: மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் எது?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க., மறந்தும் சாப்பிடாதீங்க.!
வாக்களிப்பதன் முக்கியத்துவம்: அதற்கு வாக்களிப்பது என்பது மிகவும் முக்கியமாகும். இன்று வாக்களிப்பதை அனைவரும் கடமையாக நினைக்கின்றனர், உண்மையில் அது குடிமக்களின் உரிமை. இந்திய ஜனநாயகம் 75 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் 100 சதவீத வாக்கு பதிவுக்கு தள்ளாடி வருகிறது. நம்மை ஐந்து ஆண்டுகள் யார் ஆளப்போகிறார்கள் என்பதை தீர்மானிப்பது நம்முடைய வாக்கு தான். நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்க கூடிய வலிமையுள்ள எஜமானர்கள் தான் வாக்காளர்கள். ஆனால் இந்த உரிமையை பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் ஜாதிய செல்வாக்குகாகவும் பலர் விற்பனை செய்து வருகின்றனர்.
இன்றைக்கு பல நாடுகளில் அந்நாட்டு அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் அல்லல் படுகின்றனர். ஆனால் நாம் நம்மிடம் உரிமை கொடுத்தும் நாம் அதனை செயல்படுத்தாமல் இருக்கின்றோம். பலர், "எனக்கு எதற்கு அரசியல், ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன எனக்கு ஒன்றும் கவலையும் இல்லை" என பேசிக் கொண்டு வாக்களிக்காமல் சுற்றி வருகின்றனர். ஆனால் நூறு சதவீத வாக்குப்பதிவு பெறுகிற போது தான் முழுமையான ஜனநாயகம் நமக்கு வந்தடைகிறது என்பதனை நாம் உணர வேண்டும்.