பிப்ரவரி 15, திருப்பதி (Tirupati): ரத சப்தமி விழாவை (Ratha Saptami) முன்னிட்டு திருமலை மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. திருமலையின் மாட வீதிகள் அனைத்தும் வண்ண கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. நாளை ரத சப்தமியன்று காலை துவங்கி இரவு வரை திருப்பதியில் ஏழுமலையான் ஏழு வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் மாட வீதிகளில் காட்சியளிப்பார். Video- Woman Walking Another Woman On Leash: நாயாக மாறிய பெண்... கட்டி இழுத்துச் செல்லும் மற்றொரு பெண்..!
இந்த ஒரு நாளில் ஏழு வாகனங்களில் ஏழுமலையான் வீதி உலா நடைபெறும். ரத சப்தமியன்று, சூரிய பிரபை, சிறிய சேஷ, கருட, அனுமன், சக்ர ஸ்நானம், கல்ப விருட்ச, சர்வ பூபால, சந்திர பிரபை ஆகிய வாகனங்களில் ஏழுமலையான் ஊர்வலம் நடைபெறுகிறது.