டிசம்பர், 10: மனிதன் பறவையை கண்டு வானில் பறக்க ஆசைப்பட்டு விமானத்தை கண்டறிந்தான் என்பது உலகறிந்த விஷயம். அவ்வாறு விமானத்தை (Flight) கண்டறிய பல சோதனைகளை தோல்விகளாக கடக்க வேண்டியிருந்தாலும், விடாமுயற்சி வெற்றியை தரும் என்பதை உறுதி செய்து விமானம் தயாரிக்கப்பட்டது.
இன்றளவில் விமான பயணத்தின் போது பறவையை கண்டு விமானிகள் அஞ்சவேண்டிய நிலையும் ஏற்படுகிறது. ஏனெனில், விமானம் வானில் பறக்கும் போது, அதன் என்ஜினுக்குள் பறவை எதிர்பாராத விதமாக சிக்கி இறந்துவிடும் பட்சத்தில், அது எஞ்சினை பாதித்து பெரும் விபத்தையும் ஏற்படுத்தலாம். Rain Sleeping Mood: மழை பெய்யும் நேரத்தில் உறக்க மனநிலை எதனால் ஏற்படுகிறது?.. தவிர்ப்பது எப்படி?.! காரணம் இதுதானா.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.!
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள அசத்தல் வீடியோவில், புறா ஒன்று விமானத்தின் இறக்கையில் அமர்ந்துகொண்டு இருக்கிறது. விமானம் புறப்பட தயாராகி ரன்வேக்கு வந்த நிலையில், விமானத்தின் இறக்கையில் இருந்த புறா விமானம் வேகமாக புறப்பட்டதும் வழுக்கிக்கொண்டு சென்றது.
இந்த விடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நெட்டிசன்கள், புறா இலவசமாக பயணம் செய்ய முயற்சித்து தோல்வியை சந்தித்துவிட்டதா?? என கலாய்க்கும் வகையில் கேள்வி எழுப்பி வருகின்றனர். நம்ம ஊர் நெட்டிசன்களோ வழக்கம்போல வடிவேலுவின் நகைச்சுவையை கனெக்ட் செய்து கலாய்க்க தொடங்கிவிட்டனர்.