Calf born with 2 heads (Photo Credit: @Newskarnataka X)

செப்டம்பர் 20, மங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், மங்களூருவின் (Mangaluru) புறநகர் கிண்ணிகோலி பகுதியை சேர்ந்தவர் ஜெயராம். இவர். ஏராளமான பசுமாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 18) காலையில் அவருக்கு சொந்தமான பசு (Cow) ஒன்று 2 தலை கொண்ட கன்றுக்குட்டியை (Calf) ஈன்றது. அந்த கன்றுக்குட்டிக்கு இரண்டு தனித்தனி தலைகள், நான்கு கண்கள் மற்றும் அசாதாரணமான உடல் அமைப்பை கொண்டுள்ளது. PM Modi US Visit: ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு.. பங்கேற்க பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்..!

அதன் தனித்துவமான உடல் அமைப்புக் காரணமாக, கன்று நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உரிமையாளர் பாட்டில் மூலம் உணவளித்து வருகின்றார். இந்த தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதனையடுத்து, இரண்டு தலையுடன் பிறந்த கன்றுக்குட்டியை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி: