
பிப்ரவரி 26, பிரயாக்ராஜ் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் 'மகா கும்பமேளா' (Maha Kumbh Mela) நடந்து வருகிறது. கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி, 45 நாட்கள் நடைபெற்று இன்றுடன் (பிப்ரவரி 26) நிறைவு பெறுகிறது. மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி சென்றனர். PM Modi's War on Obesity: உடல் பருமனுக்கு எதிரான போராட்டம்; 10 பிரபலங்களை பரிந்துரைத்த பிரதமர் மோடி..!
செல்போனை தண்ணீரில் மூழ்கி எடுக்கும் பெண்:
இந்நிலையில், மகா கும்பமேளாவுக்கு நேற்று (பிப்ரவரி 25) ஒரு பெண் புனித நீராடினார். அப்போது, அவருடைய கணவர் நேரில் வர முடியாததால், கணவரிடம் வீடியோ கால் பேசியபடி, அவரது மனைவி செல்போனை தண்ணீரில் 3 முறை மூழ்கி எடுத்தார். அப்பெண் நீரில் செல்போனை நனைத்து எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ இதோ:
New Age Technical Maha Kumbh Bath
नए जमाने का महाकुंभ पति को वीडियो कॉल पर संगम डुबकी लगवाकर पुण्य प्राप्त करवा दिया. हद है धर्म का मर्म ही खत्म कर दिया है जाहिलों ने. अगर इसके बाद तांडव हो तो आश्चर्य क्यों करना?#MahaKumbh2025 pic.twitter.com/StT77FAACL
— Ashutosh Pandey (@ashu_pandey01) February 25, 2025