ஜூலை 24, மத்திய பிரதேசம் (Madhya Pradesh News): மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவர் தாங்க முடியாத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு வயது 60. தற்காலிகமாக வலியை குறைக்க, வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு கடுமையான வயிற்று வலி வரவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் 16-இன்ச் சுரைக்காய் (Bottle Gourd) இருந்ததை கண்டறிந்துள்ளனர். மேலும் இது தான் அந்த நபருக்கு வயிற்று வலி ஏற்பட காரணமாக இருந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். Omni Bus Driver Tortured: ஓட்டுநரின் கைகளை ஜன்னலில் கட்டிவைத்து துன்புறுத்தல்.. வைரலான வீடியோ.. காவல்துறையினர் தீவிர விசாரணை..!
இதனைத்தொடர்ந்து மருத்துவமனையின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் குழுவினர் டாக்டர். மனோஜ் சௌத்ரி, டாக்டர். நந்த்கிஷோர் ஜாதவ், டாக்டர். ஆஷிஷ் சுக்லா மற்றும் டாக்டர். சஞ்சய் மவுரியா தலைமையில், 2 மணி நேர அறுவை சிகிச்சை செய்து 16-இன்ச் சுரைக்காயை நீக்கினர். மேலும் நோயாளி இப்போது ஆபத்தில் இருந்து மீண்டு வருவதாகவும், குணமடைந்து வருவதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து சுரைக்காய் மலக்குடலில் எப்படி வந்தது என்பது குறித்த விவரங்களை கண்டறிய மருத்துவமனை விசாரணையை தொடங்கியுள்ளது.